3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம்

by Admin / 01-02-2022 01:41:42pm
3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம்

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது

நாடு முழுவதும் 2023-க்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரெயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த ரெயில்கள் கொண்டுவரப்படுகின்றன.

சிறந்த ஆற்றல் திறன் கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 பிரதம கதி சக்தி ரெயில் முனையங்கள் அமைக்கப்படும்.

சிறு விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரெயில்வே புதிய தயாரிப்புகளை உருவாக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via