நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிகள் வெளிநடப்பு
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படும் விவகாரம் குறித்து விவாதிக்க, மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர் திமுக எம்.பிக்கள். ஆனால், ராமர் கோயில் கட்டப்பட்டது குறித்து விவாதம் நடக்க இருப்பதால், திமுகவின் தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், அவையில், 'காப்பாற்றுகாப்பாற்று தமிழக மீனவர்களை காப்பாற்று' என திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். பிறகு வெளிநடப்பு செய்தனர்
Tags :