கட்டுபாடற்ற கட்டணம்...கண்காணிக்க குழு.

by Editor / 05-01-2025 11:16:46am
கட்டுபாடற்ற கட்டணம்...கண்காணிக்க குழு.

பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால், ஆம்னி பேருந்துகள் இயக்கம் அதிகமாக இருக்கும். எனவே ஆம்னி பேருந்துகளில் வரி நிலுவை, அதிக சுமை, அதிக கட்டணம், பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும். இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும், 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர் என போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.

 

Tags : கட்டுபாடற்ற கட்டணம்...கண்காணிக்க குழு.

Share via