புகையிலை விற்ற பெண் கைது

by Editor / 25-04-2025 04:36:57pm
புகையிலை விற்ற பெண் கைது

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்று காலை அந்தப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிதறால் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி எமிலி (47) என்பவர் நடத்திவரும் கடையில் போலீசார் சோதனை செய்தனர். சோதனையின்போது அங்கு ரூபாய் 3 ஆயிரத்து 900 மதிப்பான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து எமிலி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via