கடத்தல் கும்பலுடன் பேரம் பேசிய DSP.. லீக் ஆன ஆடியோ

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மணல் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசியதால், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடத்தல் கும்பலுடன் பேரம் பேசிய ஆடியோ வெளியானது. அதில், லாரி ஒன்றுக்கு ரூ. 5,000 கேட்டு பேரம் பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, பிரதீப் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :