முதுமை ஒரு சாபமா...?

by Admin / 20-11-2024 12:10:31pm
 முதுமை ஒரு சாபமா...?

தமிழ் பண்பாட்டில் கலாச்சாரத்தில் முதியவர்களுக்கு என்று மரியாதையும் அன்பும் இருந்தது. ஆனால் ,இன்று முதுமை ஒரு சாபமாக கருதப்படுகிறது.

 தங்களை வளர்த்து ஆளாக்கி நல்ல படிப்பை வழங்கி ,திருமணம் முடித்து.. குடும்பமாக வைத்து அழகு பார்த்த பெற்றோர்கள் இன்று தனிமையில் ..விரக்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது நகர் புறத்தில், அந்நியமாதலை விடக்கொடியதாக மாறி இருக்கின்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, லண்டன், நியூசிலாந்து என்று பிள்ளைகள் படித்து ..அங்கே வேலை செய்து.. அங்கேயே குடும்பத்தை நடத்தி, தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்றான பிறகு.... பெற்றோர்கள் தனிமையில்... நகர் புறங்களில் ,எந்த விதமான ஆதரவு மற்ற நிலையில் தனிமையில் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது, தன்னுடைய பையன், மருமகள், பேத்தி, பேரன்கள் வருவார்கள் என்று ஆவலோடு காத்துக் கொண்டு வீடியோ கான்ஃபரன்ஸ் என்று சொல்லப்படுகிற காணொளி காட்சியில் பிள்ளைகளையும் அவர்கள் குடும்பத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் .ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தின் காரணமாக ...வயதான காலத்தில், பிள்ளைகள் தங்களோடு உடன் இருந்து தங்களை கவனித்துக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஏக்கத்தில் இருந்த பெற்றோர்கள் ...விரக்தியின் உச்சத்திற்கு சென்று தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். சமீபத்தில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதியவர்  போரூரில் உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 70 வயதான அவர் தன் இரண்டு மகன்களையும் வெளிநாடுகளில் படிக்க வைத்து.. அங்கேயே, அவர்கள் வேலை பெற்று திருமணம் ஆகி குடும்பமாகி குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்கள் .வயதான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளை வரும் வரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் ...கொடும் தனிமையின் காரணமாக குளிர்சாதன பெட்டி பொருத்தக்கூடிய இடைவெளி வழியாக உயர் அடுக்குகளை கொண்ட அடுக்கக உச்சியிலிருந்து யாருக்கும் தெரியாமல்.. கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இப்பொழுது தனக்கிருந்த ஒரே ஆதரவையும் இழந்த அவரது துணைவி. இது மிகப் பெரிய ஒரு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் படித்து வேலை பெற வேண்டும் .நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையை சின்ன வயதிலேயே ஊட்டி விட்டு... இறுதியில் வயதான பின்பு, பிள்ளைகள் தங்களோடு இல்லாத பொழுது.. நரக வேதனைகளை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் . தனிமை என்பது சாவை விட  கொடியது. என் மகன் அமெரிக்காவில் படிக்கிறான். அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் என்று பெருமை கொண்டு இருந்தவர்களுக்கு.. இப்பொழுது,.. மிகப் பெரிய ஒரு சவால். வயதான காலத்தில் தனிமை என்கிற ஒன்றின் கீழ் ஆட்ப்பட்டு தினம், தினம், அங்குலம், அங்குலமாக தனிமை என்கிற மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.. பிள்ளைகள் ,வெளிநாடுகளில் படித்து நல்ல சம்பளத்தை பெற்று, ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அங்கிருந்து விட்டு, திரும்ப அவரவர் சொந்த நாட்டிற்கு வந்து தன் பெற்றோர்கள், உறவுகளோடு வாழ்கிற வாழ்க்கை தான் சொர்க்கம்.. நாம் வாழ்கிற வாழ்க்கையில், பணத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதனால், பணம் இருந்தால்.. நாம் வாழுகிற பூமி சொர்க்கம் என்பதை.. ஒவ்வொரு பிள்ளைகளும் உணர வேண்டும். கடல் கடந்து சென்று அதிக பணங்களை சம்பாதியுங்கள் .ஆனால் ,உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை கொஞ்சம் அவர்கள் வயதை.. அவர்களுடைய வாழ்க்கையை கொஞ்சம்உ ற்றுக் கவனியுங்கள்.. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழ்கிறார்கள். தங்களுடைய சுக துக்கங்கள் அனைத்தையும் மனதிற்குள்ளே போட்டு புதைத்து ..அவர்களுக்காகவே ..அவர்கள் நலத்திற்காகவே தன்னுடைய ஆசா பாசங்களை எல்லாம் விலக்கி வைத்து விட்டு... என் பிள்ளைக்கு இது பிடிக்கும் ,என் பிள்ளைக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று தான் சம்பாதித்த பணத்தை அனைத்தையும் அவர்களுக்கு செலவுக்கு கொடுத்து... பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி பெரிய படிப்புகளை படித்து.. வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும்  பெற்றோர்களை பிரியமுடனும் அன்புடனும் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை இன்றைய பிள்ளைகளுக்கு உண்டு .வேலையின் காரணமாக வரவில்லை. அங்கே வந்தால் லட்சக்கணக்கில் செலவாகும் என்றெல்லாம் கணக்கு பார்க்கக் கூடிய பிள்ளைகள்... உங்கள் பெற்றோர்கள் அன்றைக்கு கணக்குப் போட்டு பார்த்திருந்தால், இன்றைக்கு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ...இந்த வெளிநாட்டு வாழ்க்கை கிடைத்திருக்குமா? என்பதை ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும். எங்கோ, ஒரு அந்நிய தேசத்தில், அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்கிற நிலையில் வாழ்ந்து வருவதை விட... நம் மக்களோடு.. மக்களாக..  வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தை வைத்து.. ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியும். நம் பெற்றோர்கள் நமக்கு என்னென்ன தியாகங்களை எல்லாம் செய்தார்களோ... அதை எல்லாம் திருப்பிசெலுத்தி சந்தோஷமாக-மகிழ்ச்சியாக... ஒன்றாக, அவர்களோடு வாழ வேண்டாமா.. யோசித்துப் பாருங்கள், பெற்றோர்களுக்கு அதுவும் வயதான பெற்றோர்களுக்கு.. நீங்கள் கொடுக்கக் கூடிய வெகுமதி. இறுதி காலத்தில், அவர்களோடு இருந்து.. அவர்களை அன்பாகவும் நேசமாகவும்.. அரவணைத்து வாழ்வதுதான்.  வேண்டும் பணம், பணம் என்று ஓடிக்கொண்டிருந்தீர்கள் என்றால், உங்களைப் பெற்றவர்கள் அனாதைகளாகத்தான், தம் சொந்த மண்ணில் கிடப்பார்கள்.

 

 

Tags :

Share via