மருது சகோதரர்கள் தூக்குத் தண்டனை ஏற்ற நாள்!

by Staff / 24-10-2025 10:34:26pm
மருது சகோதரர்கள் தூக்குத் தண்டனை ஏற்ற நாள்!

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28ல் ஆங்கிலேயர், மருது அரசின் மீது போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்தது.

ஒரு சூழலில் சிவகங்கை அரண்மனையை ஆங்கிலேயப் படை கைப்பற்றியது, மருது சகோதர்கள் அருகில் இருந்த காட்டில் மறைந்து இருந்தவாறு போரிட்டனர். காளையார் கோவில் கோபுரங்களுக்கு எதிரில் பீரங்கிகளை நிறுத்திய ஆங்கிலேயப் படை, மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் கோபுரங்களை தகர்க்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். தாங்கள் கட்டிய கோவில் தகர்க்கப்படுவதை விரும்பாத மருது சகோதரர்கள் ஆங்கிலேயர் படையிடம் சரணடைந்தனர்.

1801 இதே அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், மொத்தம் 500கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.

இது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மோசமான படுகொலை என வர்ணிக்கப்படும் 1919ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெறுவதற்கு 120 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via