களைக்கட்டும் தீபாவளிப்பண்டிகை.

by Editor / 19-10-2022 08:54:42am
களைக்கட்டும் தீபாவளிப்பண்டிகை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் ஷாப்பிங் களை கட்டியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசையில் ஈடுபடும் கொள்ளையர்களை கைது செய்யும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள், மற்றும் எப்ஆர்எஸ் கேமரா மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்திலுள்ள நகர,கிராம  பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் வாங்க கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக வேலை இழந்து, வருவாய் இழந்து பலர் தவித்தனர். இதனால், தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். எனவே, வழக்கத்தை விட இந்த ஆண்டு தீபாவளிக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள், புத்தாடைகள் வாங்க தற்போது கடைகளில் மக்கள் அலைமோதி வருகிறது.

சென்னையின் வர்த்தக பகுதிகளாக உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாண்டிபஜார், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் எப்ஆர்எஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மக்கள் அதிக நடமாட்டமுள்ள மாநகரப் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில்,பட்டாசு வாங்குவதற்காக சாத்தூர் மற்றும் விருதுநகர் மார்க்கங்களில் இருந்து சிவகாசியை நோக்கி வாகனங்கள் அணி வகுத்து சென்ற  வண்ணம் இருப்பதால், புறவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல்.சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.சிவகாசியிலுள்ள பட்டாசு கம்பெனிகளிலும் ,விற்பனையகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதிவருகிறது.மேலும் வெளிமாநிலங்களுக்கு மொத பார்சல்கள் அனுப்பப்பட்டு உள்ளூர் விற்பனைகளில் நிறுவனங்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.


 

களைக்கட்டும் தீபாவளிப்பண்டிகை.
 

Tags :

Share via