கைக்குழந்தையுடன் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

by Admin / 14-03-2022 04:55:09pm
கைக்குழந்தையுடன் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த சந்தியா உள்பட 6 பேர் கைக் குழந்தையுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைப்பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீ சார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அவர் களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், 
 
நாங்கள் உள்பட 20 குடும்பத்தினர் மேச்சேரி அருகே உள்ள குக்கல் பட்டி காட்டு வளைவு பகுதியில் வசித்து வருகிறோம். அங்குள்ள வெள்ளையன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப் பாதையில் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது உடன் மற்றொரு பகுதியை விலைக்கு வாங்கி உள்ளனர்.

இதனால் நாங்கள் வீட்டில் இருந்து வெளியில் வர முடியவில்லை. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தினமும் குடி போதையில் எங்களை மிரட்டுகிறார்கள். இந்த நிலையில் நேற்று சந்தியாவின் ஓட்டு வீட்டை தீ வைத்து எரித்து விட்டனர்.

வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக இதில் உயிர் தப்பியுள்ளனர். எனவே அந்தப் பாதையை பொதுப்பாதை யாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், மேலும் வீட்டுக்கு தீ வைத்த ராஜன் பாபு, சுப்பராயன் உள்பட 4 பேர் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
 

 

Tags :

Share via

More stories

Logo