by Editor /
11-07-2023
11:43:48pm
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி பகுதியில் காவல்துறை மற்றும் கனிமவளத்துறை சார்பில் போலீசார் சோதனை செய்து வரும் சூழலில், சோதனைக்கு பயந்து ஆங்காங்கே கனிம வள லாரிகளானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பண்பொழி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கனிம வள லாரிகளை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது, அதில் அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் ஏற்றி செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 5 வாகனங்களுக்கு ரூ.1 இதேபோன்று புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன் தலைமையில் நடந்த சோதனையில் பத்தாம் தேதி இரண்டு கனிமவள லாரிகளுக்கு 76 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பண்பொழியில் பிடிபட்ட ஐந்து வாகனங்களுக்கு ரூபாய் 1. இலட்சத்து 94 ஆயிரம் அபராதத்தை போலீசார் விதித்தனர். இன்று காலை குளியல் சோதனை சாவடி பகுதியில் நடைபெற்ற சோதனையில் இரண்டு லாரிகள் பிடிபட்டன அந்த லாரிகளுக்கு தலா ரூபாய் 40 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags :
Share via