இளம் பெண் சுட்டுக்கொலை - அதிர்ச்சி வீடியோ

by Staff / 15-12-2023 02:29:04pm
இளம் பெண் சுட்டுக்கொலை - அதிர்ச்சி வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கோடேகானை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் சாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியுடன் அங்கு வந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் இளம் பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இதில் அப்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இறந்த இளம் பெண்ணின் பெயர் காஜல் சாஹு என காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via