ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

by Staff / 07-09-2023 12:07:16pm
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சட்டவிதிகளின் படி எந்த நேரத்திலும் நடத்த தயாராக இருக்கிறோம். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். எம்பி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும்' என்றார். இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலும் முன்கூட்டியே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

 

Tags :

Share via

More stories

Logo