தஞ்சை பெரிய கோவில் சிவலிங்க பிரதிஸ்டை.

by Writer / 17-08-2021 06:01:39pm
தஞ்சை பெரிய கோவில் சிவலிங்க பிரதிஸ்டை.

"சிவலிங்க ஸ்தாபிதம் மனித யத்தனத்தினால் ஏற்படுவது நடை
பெறுவதல்ல.
இறைவனின் அனுக்கிரகமும்
கருணையும் இருந்தால்
மட்டுமே முடியும்."
 
"தஞ்சை பெரிய கோயில் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய ராஜ ராஜ சோழருக்கு நல்ல நாள் ,நல்ல நேரம் ஜோதிடர்கள் மூலம் சொல்ல பட்டது.
  
ராஜ ராஜருக்கு சிறிது மனசஞ்சலம் இருந்தது.சித்தர்கருவூர் தேவர் ஆசிகள்இல்லாமல் லிங்க பிரதிஷ்டை செய்வது சரியல்ல. ஆனாலும்நாள் குறிக்கபட்டதால் மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது.கருவூராரை அழைத்துவர சில முக்கியஸ்தர்களை  சோழ தேசம் முழுவதும் அனுப்ப பட்டது.சித்தர்கள்ஒரே இடத்தில் தங்குவதில்லை.கருவூராரை தேடிக் கண்டுபிடித்து லிங்க பிரதிஷ்டைஆகபோகிறதை விவரங்களை கூறி தான் அழைத்ததாக ராஜ ராஜர் தான் கேட்டுக்கொண்டதாக தஞ்சை கோயிலுக்கு அழைத்து வரக்கூறினார்.


      லிங்க பிரதிஷ்டை செய்யும் நாளும் வந்தது.லிங்க பிரதிஷ்டை செய்ய மூடைமூடையாக குங்குலியம்,ஜாதி காய் மற்றும் இதர
மூலிகைள் நல்ல ஹோரை பார்த்து மூலிகை கலவைகள்நல்ல வீதமாக வரவேண்டும்  பிரார்த்தனை செய்துகொப்பரைகளில்
காய்ச்சப்பட்டது.பாண லிங்கம் ஓரே கல்லாகவும்,ஆவுடையார்எட்டு பாகங்களாக கருவரைக்குள் கொண்டுசெல்லப்பட்டது. 

         
கருவரை முழுவதும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு,தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன.பல தேங்காய்கள்உடைக்கப்பட்டு,எலுமிச்சம்
பழங்கள் நசுக்கப்பட்டன.தென்னாடுடைய சிவனேபோற்றி என குரல்கள் ஒலிக்க பாணலிங்கம் படிபடியாக வீரரர்கள் மூலம் இறக்கப்பட்டு தரையை தொட்டப் போதுமூலிகை கலவைகள்ஊற்றப்பட்டன.மூலிகை ஆவுடையாருக்கும் பாணலிங்கத்துக்கும்இடைவெளியில் மேலும்மூலிகை கலவைகள் இறுகுவதற்கு சிற்பிகள் நீண்ட துடுப்பு போன்ற கரண்டிகளால் உள்ளே செலுத்தப்பட்டன.     மருந்து இறுக வேண்டும்என்பதற்காக வெட்டி வேர்தட்டிகளால் வீசப்பட்டன.

ஈர துணிகள் நீரில் முக்கி பிழிந்து மூலிகை கலவை மீது சாற்றப்பட்டது.நன்கு இறுகியது என்றுதெரிந்தவுடன் பாண லிங்கத்தின் உறுதியை சோதிக்க பலம் கொண்டமட்டும் அசைக்க பாணலிங்கம் இடது பக்கம் சாய்ந்தது.இதை பார்த்த ராஜ ராஜருக்கு மனதுகுள் மிகுந்த வலி என்ன செய்வது என்ற பதற்றம்?"தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரிய லிங்கத்தை போல் இதுவரை சோழ தேசத்தில் ஸ்தாபித்தது இல்லை.இடுப்பு உயர சிலைகளும்,ஆள் உயரசிலைகளை அடித்து பழக்கபட்டவர்கள்.இத்தனை அகலமுள்ள சிவலிங்கத்தைபிரதிஷ்டை செய்வது இதுவே முதன் முறையாகும்.


        ராஜ ராஜர் இறைவனைவணங்கி இந்த கோயில் திரப்பணி என்னால் ஆரம்பிக்கப்படவில்லை.என்னால் நடத்த படவில்லை.இறைவனே இங்கு தன்னை நிலை நிறுத்தி கொள்ள ஒரு இடம் தேடி இங்குமிகப்பெரும் கோயில் எழுப்புகிறார்.இந்த சக்கரவர்த்தி ராஜ ராஜர்கட்டிய கோயிலல்ல.பல பேருடைய. தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர்.
       
தன்னாலே சகலமும் நடக்கிறது என்று யார்நினைத்தாலும் அதுவே அவர் அழிவுக்கு வழி வகுத்திடும்.இராஜ இராஜருக்கு ஒருமனகலக்கம் இருந்தது.பாண லிங்கம் நிற்காவிட்டால்இத்தனை சிற்பிகள் செய்த துவாரபாலகர்கள் சிலைகள உயர்ந்த கோபுரம் அத்தனையும் உபயோகமில்லாது போகுமா என்ற மனசஞ்சலம் ஏற்பட்டது.ஆவுடையார் பிரிக்கப்பட்டுமூலிகை கலவைகள் அனைத்தும் சுரண்ட பட்டுஎடுக்கப்பட்டன.     

   
ராஜ ராஜர் நானும் முக்கியமில்லை,நீங்களும்முக்கியமில்லை, சிவ லிங்கம் முக்கியம்,கோயில் முக்கியம்என்று உரையாற்றியது சிற்பிகளுக்கும் மறவ வீரர்களுக்கு வேத வாக்காகமாறியது.மீண்டும் பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.மூலிகை கலவைகள் நன்கு காய்ச்சிஊற்றப்பட்டது.மூலிகை கலவைகள் மீது ஈர துணிகள் போட்டு நன்கு குளிரூட்டப்பட்டது.கயிறு போட்டு இரண்டுபக்கம் போட்டு இழுக்கப்பட்டது.டப்பென்று சத்தம்கேட்டது.அந்த சத்தம் ராஜ ராஜ சோழருக்கு கேட்டது.வயிறு கலங்கி வானத்தைபார்த்து கைகூப்பினார்.  அன்று புரிந்தது இறைவனுடைய கருணை வேண்டும்.கருவூரார் போன்ற சித்த புருஷர்களுடைய சீர்வாதம் வேண்டும்.கருவூராரை அழைக்காமல்இந்த காரியத்தை 
ஆரம்பித்தது தவறு.அரசர்மனமுருக குருநாதரைவேண்டினார்.கருவூராரைஅழைத்து வர மேற்கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலில்பாண லிங்கம் மீண்டும் உயர்த்த பட்டு மூலிகை கலவை சுரண்ட பட்டு மணலில் ஊன்றப் பட்டது.கருவூரார் தஞ்சையை நோக்கி வருவதாக செய்திகள் வந்தது.கருவூர்த்தேவர் வந்தவுடன்கோயில் கட்டும் இடத்தில்விழுந்து வணங்கினார்.மெல்ல கோயிலை வலம் வந்து கருவறை குழியில் இறங்கி பரிசோதித்தார்.   சிவலிங்கத்தின் அடி பகுதியில் உளியால் பொறிக்க சொன்னார்.மறவர்கள் பிடித்தால் மட்டும் போதாது.வணிகர்கள்,
வேளாளர்கள்,அந்தணர்கள் அனைவரும்அழைக்கப்பட்டனர்.மறவர்கள் முதலில் இருக்கட்டும்.அடுத்தபடி மற்றவர்கள் இருக்க வேண்டும்.

தெய்வீக காரியங்கள்ஊர் கூடி இணைந்து செய்ய வேண்டும்.ஊர் கூடி இழுத்தால்தான் தேர் இழுக்க வேண்டும்.நீங்கள் மட்டும் இழுத்தால் தேர் நகர்ந்து விடுமா என்று அங்கிருந்தவர்களை பார்த்துக் கேட்டார்.   

  "எல்லோரையும் அழைத்து இருக்க வேண்டும்.எல்லோரும்இதில் பங்கு பெற வேண்டும்.அரண்மனை பெண்டீர் வரவரவழைக்க பட்டார்கள்.தேவரடியார்கள் அழைக்கபட்டார்கள்.கூட்டம் கூட்டமாக நின்ற ஜனங்களும் வேலி தாண்டி வந்தார்கள்.அனைவரையும் கருவூரார்வேலைகளை பிரித்துக்கொடுத்தார்.      ராஜ ராஜர்,பட்டமகிஷியும்தவிர அத்தனை பேரும் வேளை செய்தார்கள்.


பட்டமகிஷியும் இரண்டு மனைவியரும் வேலைசெய்லாமே,குவளைகளில் நீர் மொண்டு கொடுக்கலாமே என்று கருவூர்த்தேவர் உத்தரவிட்டார்.ஊர்கூடி தேர் இழுக்கப்பட்டது.அடுப்பில் இருந்தநெருப்பு ஒருவன் காலைநெருப்பு பதம் பார்த்து விட்டது.ராஜ ராஜர் இதை கவனித்து விட்டு அவனருகே சென்று அவனை நகர்த்தி விட்டு மூலிகை கலவை சட்டியைதூக்கினார்.முன்னால் சுமக்கிற வீரனுக்கு பின்னால் ராஜ ராஜரும் தூக்கி கொண்டுவருகிறார் என்று தெரியவில்லை.அந்த கலவைதான் முதலில் போய் கருவறைக்குழியில் அடைந்தது.ஊற்றப்பட்டது.கருவறை மங்கியவெளிச்சத்தால் ஏதும் புரியவில்லை.
அடுத்தடுத்து மூலிகைகலவை ஊற்றப்பட்டது.   

  
கருவூர்த்தேவர் தாவி பாணலிங்கத்தின் மீது ஏறி காலால் மிதித்து அழுத்தினார்.கருவூரார்கீழே குதித்து சுற்றி வந்தார்.என் சிவனே...என் சிவனே..இங்கு இரும்..கருவறை சுற்றி ஓடினார்.மூலிகை நெடி தாங்கமல் முகத்தை சுற்றி இருந்த துணியை அகற்றியபோது ராஜ ராஜர் அங்கு நிற்பதை பார்த்து பரவசமானார்கள்.அவரும்தோள் தூக்கி வந்திருக்கிறார்என்பதை புரிந்து கொண்டார்கள்.தென்னாடுடைய சிவனேபோற்றி என்று ராஜ ராஜர் குரல் கருவறை முழுவதும்ஒலித்தது.கயிற்றை கற்றிபாணலிங்கம் அசைத்துபார்த்தார்கள்.பாணலிங்கம்மிக உறுதியாக நின்றுவிட்டது.ஆவுடையாரை கொண்டு வரப்பட்டு அண்டக் கொடுக்கப் பட்டது.வேறு வகையான குழம்பு கொண்டுஊற்றபட்டது.      ராஜ ராஜரை அழைத்துக்கொண்டு கருவூரார் வெளியே அழைத்து வந்தார்.இராஜராஜாஉன்னால் தான் இது நடந்தது.எபொழுது எந்தவீதமானகம்பீரமும் இல்லாமல் சாதாரணமான தூக்குச்சட்டிக்கு தோள் கொடுத்தாயோஅப்பொழுதே இறைவன் இங்கு வந்து விட்டான்.எப்போது எல்லாமக்களும் இதில் பங்கு பெற்று விட்டார்களோ அப்பொழுதே இங்கு இறை சாந்நித்யம் வந்து விட்டது.இல்லை குருநாதா இது உங்களால் தான் நிகழ்ந்தது என்று ராஜ ராஜர் கூறினார்.    


கருவூரார் இறைவன் உன்னையும்,தஞ்சை மக்களை ஒன்றாக இணைக்கவேஇறைவன் ஆடிய நாடகமிது என்று கூறினார்.தஞ்சை பெரிய கோயிலின் தத்துவமே ஊர் மக்கள் ஏற்றத்தாழ்வின்றி இறை சேவைசெய்ய வேண்டும் என்பதே.பணம்,அந்தஸ்தோ இறை வணக்கத்தில் முக்கியமில்லை.
பாகுபாடு இல்லாத மனபக்குவமே முக்கியம்.-

.பாலகுமாரன் -உடையார் என்ற நூலில்இருந்து.


-தொகுப்பு - ரவீன் 

 

Tags :

Share via