பெருவெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!
மத்திய பிரதேசத்தில், பெருவெள்ளத்தில் தத்தளித்தவர்களை மீட்க சென்று சிக்கிக்கொண்ட உள்துறை அமைச்சர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில், பெருவெள்ளத்தில் தத்தளித்தவர்களை மீட்க சென்று சிக்கிக்கொண்ட உள்துறை அமைச்சர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி,கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்த நிலையில் தாதியா மாவட்டத்தில் பாதிப்பு நிலை குறித்து ஆய்வு செய்ய அத்தொகுதி எம்எல்ஏவும், உள்துறை அமைச்சருமான நரோட்டம் மிஸ்ரா படகில் சென்றுள்ளார். அப்போது கோத்ரா கிராமத்தில் காப்பாற்றும்படி குரல் எழுப்பியபடி மேற்கூரையில் நின்று கொண்டிருந்த 9 பேரை கண்ட மிஸ்ரா, உடனடியாக படகினை அங்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அங்கு சென்றபோது, கடும் சூரைக்காற்று காரணமாக படகு மீது மரம் ஒன்று விழுந்துள்ளது. இதனால் படகினை மீண்டும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கூறிய மிஸ்ரா, உடனடியாக ஹெலிகாப்டரை வரவழைத்து, மீட்பு குழுவினர் மூலம் 9 பேரை மீட்டார். அதைத்தொடர்ந்து அவரும் ஹெலிகாப்டரில் மீட்டு அழைத்து செல்லப்பட்டார்
Tags :