பாமக - அதிமுக இடையே மோதல்

by Staff / 03-01-2023 03:52:53pm
பாமக - அதிமுக இடையே மோதல்

பாமக தலைவர் அன்புமணி மத்திய அமைச்சரானதும், எம்பியாக தற்போது இருப்பதும் எங்களது தயவால்தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்த சம்பவம் பாமக - அதிமுகவினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக செய்தித்தொடர்பாளர் பாலு, அன்புமணி குறித்து ஜெயக்குமார் தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்தா என்பதை இபிஎஸ்தான் விளக்க வேண்டும். அதிமுக துவண்டு போயிருந்தபோதெல்லாம் அக்கட்சி மீண்டும் வர பாமகதான் உடன் இருந்தது. நுனிமரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவதைபோல ஜெயக்குமார் செயல்படுகிறார் என கூறினார்.
 

 

Tags :

Share via

More stories

Logo