ஆன்லைன் ரம்மி விளையாடி கடன் சுமை -ராணுவ வீரர் மாயம்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதியம்புத்தூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அருண்குமார் (26) என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்து பணி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று ஹைதராபாத்தில் இருந்து விடுமுறையில் வந்தவர் கடந்த நவம்பர் 17 அன்று பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.ஆனால் அருண்குமார் ராணுவ பணிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இது குறித்து அவரது தந்தை கணேசன் பல்வேறு இடங்களில் விசாரித்து பார்த்ததில் ராணுவ வீரர் அருண்குமார் ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாய் இழந்ததாகவும் .
தந்தை கணேசனுக்கு தெரியாமல் பூர்வீக சொத்தை விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வட பழனியில் உள்ள தங்கும் விடுதியில் சுமார் 80 நாட்கள் தங்கி விட்டு பணம் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை தனது மகன் அருண்குமார் குறித்து எந்த வித தகவலும் கிடைக்காத நிலையில் இன்று அவரது தந்தை கணேசன் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் தனது மகன் அருண்குமாரை கண்டுபிடித்து தருமாறு அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : ஆன்லைன் ரம்மி விளையாடி கடன் சுமை -ராணுவ வீரர் மாயம்.