ஆவணி அவிட்டம்- ரக்ஷா பந்தன்இந்து மதத்தில் முக்கிய பண்டிகை

by Admin / 30-08-2023 10:39:32am
ஆவணி அவிட்டம்- ரக்ஷா பந்தன்இந்து மதத்தில் முக்கிய பண்டிகை

 இந்து மதத்தில் கொண்டாடப்படுகின்ற இரண்டு முக்கிய பண்டிகை ஆவணி அவிட்டம் ரக்ஷா பந்தன் இந்த இரண்டு பண்டிகைகளும் வேதத்தையும் மகாபாரதத்தையும் அடிப்படையாகக் கொண்டவை இரண்டுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையும் நூலால் ஆனது பாரதப் போரில் பாண்டவர்களுக்கு தேரோட்டியாக வந்த கிருஷ்ண பரமாத்மாவின் கையில் காயம் ஏற்பட்டதை அறிந்த திரௌபதி. அந்த காயத்திற்கு கட்டு போடும் விதமாக தன்னுடைய சேலையில் இருந்து கிழித்து கட்டப்பட்ட கயிறை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த பண்டிகை என்று சொல்லப்படுகிறது. தன் காயத்திற்கு கட்டுப்போட்ட திரௌபதியை, தன் சகோதரியாக  கிருஷ்ண பரமாத்மா வரித்துக் கொண்டு, இனி, உனக்கு எந்த ஆபத்து வந்தாலும் ஒர் அண்ணனாக இருந்து உதவுவேன்: காப்பேன் என்று சொன்னதை அடிப்படையாக வைத்து தான் அண்ணன் தங்கையினுடைய பாசத்தை வெளிப்படுத்தும் முகமாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது

.வேதம் தோன்றியதை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப் பெறும் உபாகர்மா ஆரம்பமே ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிறது. வேதம் பிறந்த காலம் இந்த ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தின் பொழுது தோன்றியதால் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கின்ற தாத்பரியத்தின் வெளிப்பாடாக இந்த ஆவணி அவிட்டம் பூணூல் புதிதாக போட்டுக் கொள்வதும் பழையதை மாற்றுவதும் மான நிகழ்வாக நிகழ்த்தப்படுகிறது.

 

ஆவணி அவிட்டம்- ரக்ஷா பந்தன்இந்து மதத்தில் முக்கிய பண்டிகை
 

Tags :

Share via