14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 30-08-2023 09:00:58am
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தின் சில பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 

 

Tags : 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

Share via
Logo