தீபாவளி பண்டிகையை ஆட்டு சந்தையில் 4கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை.

by Staff / 13-10-2025 09:36:25am
தீபாவளி பண்டிகையை ஆட்டு சந்தையில் 4கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை.

மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் வாரம்தோறும்
ஞாயிற்றுக்கிழமை மாட்டுச் சந்தையும், திங்கள்கிழமை தோறும் ஆடு மற்றும்
கோழி சந்தையும் நடை பெற்று வருகிறது.

இதற்காக மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில்
வளர்க்கப்படும் ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்காக
கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதனை மதுரை ,
திண்டுக்கல், விருதுநகர், தே னி, இராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை ,
உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள்
மற்றும் விவசாயிகள் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், வரும் 20-ஆம் தேதி தீபாவளிபண்டிகை கொண்டாடப்பட உள்ள
நிலையில், மேலூர் ஆடுகள் விற்பனை வாரச்சந்தையில் கால்நடை வளர்ப்பார்கள் நள்ளிரவு முதல் காலை வரை சரக்கு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு சந்தையில் 
5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் 10 முதல் 12 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ-8,000 முதல் 10,000 
வரையிலும், வெள்ளாடுகள் ரூ-9000 முதல் 12-ஆயிரம் வரை இன்று விற்பனை
செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வரத்து அதிகமாக தேவைபடுவதால் இன்று நடைபெற்ற இந்த கால்நடை விற்பனை சந்தையில் நான்கு
கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெ ற்றதாக கால்நடை வளர்ப்போரும்,
வியாபாரிகளும் தெ ரிவித்தனர்...

 

Tags : தீபாவளி பண்டிகையை ஆட்டு சந்தையில் 4கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை.

Share via