"நீட் மறு தேர்வு கிடையாது" - சென்னை உயர்நீதிமன்றம்

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மே 4ஆம் தேதி நடந்தது. அன்றைய தினம் சென்னையில் பெய்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை, மறு தேர்வு வேண்டும் எனக் கூறி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம், “நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது. மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளது.
Tags :