பைக் பந்தயம் பரிதாபமாக பலியான வாலிபர்

by Editor / 27-03-2022 10:19:49am
  பைக் பந்தயம் பரிதாபமாக பலியான வாலிபர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த வாகைகுளம் நான்கு வழிச்சாலையில் தற்போது விடுமுறை நாட்களை கருத்தில்கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர் மேலும் இங்கு உள்ள ரெட்டைமலை நான்கு வழி சாலையில் சட்டவிரோதமாக பைக் மற்றும் கார் பந்தயம் நடத்தி வருகின்றனர். இந்த கார் பந்தயம் இருசக்கர வாகன பந்தயத்தில் செல்வந்தர் வீட்டு சீமான்கள் தங்களது விலை உயர்ந்த கார் மற்றும் பைக் பந்தயத்தில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேசமயத்தில் வாகனங்களில் அது வேகமாக செல்வதை செல்போனில் வீடியோ எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

 இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த உதயா என்கின்ற 25 வயதான வாலிபர் ஒருவர் இருசக்கர வாகன  பந்தயத்தில்  பங்கேற்றுள்ளார். வெளி நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்த அவருக்கு அதிவேகத்தில் பைக் ஓட்டுவது பிடிக்கும் என்பதால் வாகன போக்குவரத்து குறைந்து சனிக்கிழமை அதில் தங்கள் குழுவினருடன் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அதிவேகத்தில் பைக்கை இயக்கியுள்ளார். எப்பொழுதும் 280 முதல் 290 கிலோமீட்டர் வேகம் காட்டி மின்னல் வேகத்தில் சென்றது அவரது இரு சக்கர வாகனம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் ஆகிய நான்கு வழி சாலை பாலம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத  வாகனத்தின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் இரண்டு துண்டாகி தீப்பற்றி எரிந்தது. மேலும் உதயாமீதும்  தீப்பற்றியது. தூக்கி வீசப்பட்ட உதயா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விபத்து குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : பைக் பந்தயம் பரிதாபமாக பலியான வாலிபர்

Share via

More stories

Logo