கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதியில் போலியான பயனாளிகள்-அறிக்கை சமர்பிப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதியில் போலியான பயனாளிகளை உருவாக்கி வங்கிக் கணக்குகளையும் உருவாக்கி அந்த வங்கிக் கணக்கில் மூலமாக 20 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தத விவகாரம்
கடியாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் வெங்கடேஷ் மற்றும் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வருன் குமார் உட்பட கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த பணியில் யார் யார் பணியாற்றி இருந்தார்களோஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிடம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ராம் கணேஷ் புகார். சிறப்பு தணிக்கை குழு தனது அறிக்கையை சென்னையில் உள்ள சுகாதாரத் துறை இயக்குனருக்கு சமர்ப்பிப்பு,விரைவில் துறை ரீதியான நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விசாரணையும் நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்.
Tags : கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதியில் போலியான பயனாளிகள்-அறிக்கை சமர்பிப்பு.