10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வெளுத்து வாங்கபோகிறது மழை

இந்தியாவில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, ஒடிசா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், அசாம், சிக்கிம், கோவா, மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ராஜஸ்தான், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
Tags : More than 10 states are going to receive rain