விஜய் - உதயநிதி யுத்தம் வரலாம்
நடிகர் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். அப்படி அவர் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தால் தமிழ்நாடு அரசு எதிர்காலம் விஜய் - உதயநிதி என மாறக்கூடிய வாய்ப்பு அதிகம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது திமுகவில் இளைஞர் அணி செயலாளர் என்ற உயர்ந்த பதவியிலும், அமைச்சராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உதயநிதி இளைஞர்களின் வாக்குகளை பெருவாரியாக ஈர்க்கக்கூடிய சக்தியாக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில், விஜயும் இளைஞர்களை ஈர்க்கக்கூடிய வகையில் செயல்படுவார் என நம்பப்படுகிறது. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பல அணிகளாக உடைந்து சரியான எதிர்கட்சியாக செயல்பட முடியாத நிலையில் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசியல் எதிர்காலம் எம்ஜிஆர் - கலைஞர், கலைஞர் - ஜெயலலிதா, ஸ்டாலின் - எடப்பாடி போல் வருங்காலத்தில் விஜய் - உதயநிதி என மாறக்கூடிய நிலை வரலாம் என பார்க்கப்படுகிறது .
Tags :