2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

by Editor / 04-10-2024 12:13:56am
 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடந்தது.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய  3 அணிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக அடுத்தகட்டமாக திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற  உள்ளது.

இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் கழகத் தகவல் தொழில் நுட்ப அணியின் மூன்றாண்டு செயல்பாடுகள் குறித்தும், எதிர்காலப் பணிகள் குறித்தும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலிடம், திமுக ஐடி விங் செயலாளர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சமர்ப்பித்து விபரங்களையும்
எடுத்துரைத்தார்.இதே போன்று சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
 

 

Tags : 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

Share via