மாணவியின் வயிற்றில் இருந்த 2 கிலோ தலை முடி
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்க்கும்போது கட்டி போல வயிற்றில் இருந்துள்ளது. பின்னர் அது முடி என்பதை உறுதிப்படுத்திய பின்னர், அறுவை சிகிச்சை மூலம் மாணவி வயிற்றில் இருந்து 2 கிலோ முடி அகற்றப்பட்டுள்ளது. சிறு வயதிலிருந்து மாணவிக்கு முடி சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. மன அழுத்தம் உள்ள சில குழந்தைகளுக்கு ட்ரைக்கோ பிசயர் என்ற நோய் ஏற்படுவதன் மூலம் இவ்வாறு நடந்துகொள்வார்கள்.
Tags :