நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி மனு தாக்கல்
நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா மீண்டும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தன்னை நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்து உள்ளார். தனது கணவர் தன்னை நீலாங்கரை வீட்டிற்கு அனுமதிக்க மறுக்கிறார் என்றும் வழக்கறிஞர் வழி மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளதோடு தான் 26 ஆண்டுகள் அவரோடு குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி உள்ளேன் என்றும் அவர் ஆரம்ப காலகட்டத்தில் சாதாரண ஒரு நடிகராக இருந்தவரை இணைந்து அவர் வளர்வதற்கு பல்வேறு வழிகளில் தான் உதவியதாகவும் அதனால் அந்த வீட்டில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சரி பாதி உரிமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகையோடு அவருக்கு இருக்கும் தொடர்பின் காரணமாக தான் விவகாரத்து வழக்கு தொடுத்து இருப்பதாகவும் தற்பொழுது தான் சென்னையில் வசிப்பதற்கு இடமில்லாமல் பிரிட்டன் குடியுரிமையின் காரணமாக தற்பொழுது தான் சென்னையில் வசிப்பதற்கு இடமில்லாமல் தவிப்பதாகவும் குறிப்பிட்டு நீதிமன்றம் நீலாங்கரை வீட்டில் தான் வசிப்பதற்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெளிவுபடுத்தி உள்ளார்.
Tags :


















