மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை புதிய தலைமையுடன் பாஜக எதிர்நோக்கும் நிலையில் தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி தேர்தல் வியூகம் வகுக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரவு தனியார் விடுதியில் தங்குகிறார். தொடர்ந்து நாளை 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறுஅரசியல்கட்சியின் நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக முன்னாள் தலைவர் தமிழிசை வீட்டுக்கு சென்று ஆறுதல்கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை.