தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இத் இத்தேர்தல் தொடர்பான கூட்டம் பனையூரில் வியாழக்கிழமை தமிழக வெற்றி கழக தலைமை இடத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விஜய் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அவரது தலைமையின் கீழ் கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளை வரவேற்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட்டது. அக்குழு பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரம் கட்சியின் தலைவர் விஜய்க்கு வழங்கப்படுவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Tags :


















