“கருணையும் ஒற்றுமையும் தான் இப்போது தேவை” - ராகுல்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சோகத்தில் கர்நாடகா அரசு கேரளாவுக்கு ஆதரவாக நிற்கும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா அரசு 100 வீடுகள் கட்டித் தரும் எனவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். அதற்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “உங்கள் அர்ப்பணிப்பு மறுவாழ்வு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க படியாகும். இந்தியர்களின் கருணையும் ஒற்றுமையும்தான் வயநாட்டுக்கு இப்போது தேவைப்படும் பலம்” என தெரிவித்துள்ளார்.
Tags :