கால நதி சுழித்து ஓடிக்கொண்டே இருக்கிறது..சாதியால் ,மதத்தால், பணத்தால் நடக்கின்ற சண்டைகளுக்கு என்று தான் தீர்வு

by Admin / 28-01-2024 06:31:53pm
 கால நதி சுழித்து ஓடிக்கொண்டே இருக்கிறது..சாதியால் ,மதத்தால், பணத்தால் நடக்கின்ற சண்டைகளுக்கு என்று தான் தீர்வு

நிலம் அப்படியே இருக்கும் .எத்தனையோ போ் . என்னென்ன வழிகளிலோ சம்பாதித்து.... அதை தனக்குரிய சொத்தாக மாற்றிக்கொண்டு வாழ்ந்து வந்தாலும், ஒரு நாள் அந்த நிலம் யாருக்கும் அற்று.... தனக்குரியதாகவே அது இருக்கும்.

. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பணமும் அப்படித்தான்..அது ஒரு சக்கரத்தை போன்று ஒரே ஒரு நபரிடம் மட்டும் இல்லாமல் சுற்றி சுழன்று கொண்டு ஒவ்வொருவராக மாறிக்கொண்டே சென்று கொண்டிருக்கும்.

யாரிடமும் நிரந்தரமாக தங்கி விடாது. தங்கத்தின் கதையும் இதுதான் .ஆக, இதற்குத்தான் இந்த மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

.தங்கள் உறவுகளை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.. தங்கள் உடன்பிறப்புகளை சண்டையிட்டு சாகடித்து இல்லை... ஒன்றும் இல்லாமல் ஆக்கி... தாங்கள் மட்டுமே பணம் படைத்தவர்களாக இந்த ஊருக்குள் உலா வர வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டு திமிராக திரிந்து கொண்டிருக்கிறார்கள்

. ஆறடி நிலம் கூட சொந்தமில்லை என்று தெரிந்த பின்பும்..

இந்த உடம்புக்குள்ளே இருக்கின்ற காற்று ஒரு நாள் போய்விட்டால் ,.. இந்த மனிதர்கள் பெயரின்றி பிணமாக கிடப்பர். .அவர்களை நிலம் திங்கப் போகிறதோ.... இல்லை . நெருப்பு சாம்பலாக்கி.....நீர்,கரைத்து குடிக்க போகிறதோ தெரியவில்லை

.இதற்கிடையில் சூழ்ச்சி.... மாய வேலைகள்... பேய்- பிசாசை கைக்குள் வைத்திருக்கிற மந்திரவாதிகளை துணை கொண்டு ...மற்றவர்கள் முன்னேற்றத்தை தடுத்து.... தான் மட்டுமே ,நிரந்தரமாக வாழ போகிறோம் என்று தினந்தோறும் செத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்....

பஞ்ச பூதம் என்று அழைக்கப்படுகின்ற காற்று, நீர் ,நெருப்பு ,நிலம் ,இந்த ஆகாயவெளி. எத்தனை எத்தனையோ... ஜீவராசிகளை பார்த்து தனக்குள்ளே ஜீரணித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. இதை உணராத அறிவு ஜீவிகளான- விஞ்ஞான அறிவு படைத்த  வெற்று மனித ஜன்மங்கள்...... நெஞ்சு கூட்டுக்குள்ளே, எத்தனை வன்மங்களையும் -, வஞ்சகங்களையும் - பொறாமைகளையும் வைத்துக் கொண்டு... தன் சக மனிதர்களை வாழ விடாமல் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தானே .....அவர்களும் வாழ்ந்து விட்டு போவதற்கு தானே ...இந்த பூமி இருக்கிறது என்கிற எண்ணத்தை, எந்த காலத்திலும், .இந்த மனித ஜென்மம் நினைத்ததே இல்லை..

.இதில் ,அரசியல் வேறு தலையில் உச்சத்தில் ஏறி உட்கார்ந்து அதிகார போதையில் மனிதர்களை பாடா படுத்துக் கொண்டிருக்கிறது.. பதவி நாற்காலி சண்டைக்கு போடப்படுகின்ற கூத்துக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

என்ன புகழோ- அது கொடுக்கிற மயக்கமும் தெரியவில்லை. அதற்காக அடித்துக் கொள்ளக்கூடிய கொடுமைகள்- செய்யப்படுகிற கொடுமைகள், தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் இந்த மனிதன் அச்சடித்த காகிதமும் இந்த மண்ணும் தான் ,ஆசையாக நின்று அவர்களை ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது.

எவ்வளவு நிலங்களை வாங்கி வைத்தாலும்- எவ்வளவு பணத்தை கோடி- கோடியாக குவித்து வைத்தாலும் எவ்வளவு தங்கத்தை கட்டி கட்டியாக வீட்டில் பூட்டி வைத்தாலும் போகும்போது அருணாக்கயிரை அறுத்து விடுகின்ற சமூகம்

இடுகாட்டுக்குள்ளே-.சுடுகாட்டுக்குள்ளே புதைக்கிறதா- எரிக்கிறதா என்றே நமக்கு தெரியாது... இதற்கு இடையில் எத்தனை எத்தனை சதி வேலைகளை மனிதன் செய்து கொண்டிருக்கிறான். கொஞ்சமும் அடங்காமலே, அவன் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.

தண்ணீரில் கால் பதித்தால் தடம் தெரிவதில்லை என்பது வரலாறை யாரும் பேசப் போவதில்லை. லட்சக்கணக்கான மனிதர்கள் மத்தியில் யாரோ ஒருவருடைய பெயர் உச்சரிக்கப்படுகிறது. கோடிக்கணக்கானவர்களில் யாரோ ஒருவருடைய பெயர் காலம் காலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதற்கு இடையில் பிறந்து- வளர்ந்த எத்தனையோ மனிதர்கள் என்னென்ன கனவுகளோடு மற்றவர்களை அழித்து- ஒழித்த ஆசை கொண்ட மனிதர்கள்இருக்கும் இடம் இல்லாமல் பெயர் இன்றி போனார்களோ... ,என்று இந்த மனித சமூகம் உணரப்போகிறதோ தெரியவில்லை.

காலங்கள் தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. .

அதனோடு சேர்ந்து மனிதர்களுடைய கனவுகளும் ஆசைகளும் உருண்டு கொண்டே இருக்கின்றன.

எத்தனையோ தலைகளும் உருண்டு கொண்டிருக்கின்றன.. அதுவும் இந்த காலத்தில் பஞ்சமாக பாதகச் செயலை செய்வது என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகளை கூட பாலியல் வன்புணர்வு செய்யக்கூடிய மனித அரக்கர்களை  ஈன்றெடுத்து விட்டிருக்கின்ற கொடுமை இருக்கிறதே அது மிக மிகக் கொடூரம். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு.....இந்த கால நதி சுழித்து ஓடிக்கொண்டே இருக்கிறது

..சாதியால் ,மதத்தால், பணத்தால்,பதவியால் நடக்கின்ற சண்டைகளுக்கு என்று தான் தீர்வு வரப்போகிறதோ...?.

 

 கால நதி சுழித்து ஓடிக்கொண்டே இருக்கிறது..சாதியால் ,மதத்தால், பணத்தால் நடக்கின்ற சண்டைகளுக்கு என்று தான் தீர்வு
 

Tags :

Share via