வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

by Admin / 23-07-2021 12:20:40am
வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...


 
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த ஜூன் முதல் வாரத்தில் 67 அடியாக உயர்ந்த நிலையில், மதுரை, திண்டுக்கல் மாவட்ட மு போக பாசனத்திற்காக  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் விவசாய தேவைக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.


தண்ணீர் வெளியேற்றத்தை விட வரத்து அதிகரித்து காணப்படுவதால், அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததையடுத்து, கடந்த வாரம் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே  தொடர் நீர்வரத்து காரணமாக அணை நீர்மட்டம் 68 புள்ளி 50 அடியாக உயர்ந்துள்ளதால், தற்போது 2ம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணை நீர்மட்டம் 69 அடியாக உயரும்பட்சத்தில், அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

 

Tags :

Share via