ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு
கர்நாடகாவில் இரண்டாவது கொரோனா அலையின்போது டெல்டா வைரஸ் பரவல் விகிதம் 90.7 சதவீதமாக இருந்தது என்று கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் கே.சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய புள்ளி விபர அடிப்படையில் டெல்டா பரவல் குறைந்து விட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் 67.5 சதவீத மாதிரிகள் ஒமைக்ரான் பாசிட்டிவ் ஆக உள்ளது. ஆனால் டெல்டா வைரஸ் பாசிட்டிவ் 26 சதவீதமாக இருப்பதாக தமது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தற்போதைய மூன்றாவது அலையில் ஒமைக்ரான் வைரஸ் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை புதிதாக 31,198 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags :