இந்தியாவிற்குள் நுழைந்து சட்டவிரோதமாக தங்கிய 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌.

by Editor / 25-01-2025 09:45:49am
இந்தியாவிற்குள் நுழைந்து சட்டவிரோதமாக தங்கிய 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌.

திருப்பூர் மாநகர பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊடுருவி பனியன் நிறுவனங்களில் முறைகேடாக பணியாற்றி வருவதாக கோவை தீவிரவாத தடுப்பு குழு போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் திருப்பூரில் நேற்று சோதனை நடத்தி முப்பதுக்கு மேற்பட்டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் 20 பேர், தெற்கு காவல் நிலையத்தில் 6 பேர், 
நல்லூர் காவல் நிலையத்தில் 2 பேர், என மொத்தம் 28 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக இந்தியாவிற்குள் நுழைந்து திருப்பூரில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. அவர்களை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்து கைது செய்தனர். 
ஜனவரியில்  மாதத்தில் மட்டும் 46 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 28 பேர் என 74 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags : இந்தியாவிற்குள் நுழைந்து சட்டவிரோதமாக தங்கிய 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌.

Share via