அண்ணாமலையார் மலை மீது உள்ள ராட்சத பாறையை உடைக்கும் பணிகள் தீவிரம்.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 1ம் தேதி அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 40 டன் எடையுள்ள பாறை உருண்டு குடியிருப்பு பகுதி அருகே நின்றது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த பாறையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 22 மற்றும் 23ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ராட்சத பாறையில் துளையிடும் பணிகள் நடைபெற்றது. பாறையில் 220 துளைகள் போடப்பட்டு நேற்று காலை லைம் ப்ளஸ் கால்சியம் ஹைட்ராக்சைட் என்ற வேதிப்பொருள் துளையில் ஊற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை பாறையில் இருபுறங்களின் பக்கவாட்டில் இருந்து பாறை பெயர்ந்து விழுந்தது.
இதனை தொடர்ந்து நான்காம் நாளான இன்று கிட்டாச்சி இயந்திரம் மூலம் பாறை உடைக்கும் பணிகள் நடைபெறு வருகின்றது.
Tags : அண்ணாமலையார் மலை மீது உள்ள ராட்சத பாறையை உடைக்கும் பணிகள் தீவிரம்.