முத்தம்மாள்புரம் காசிவிஸ்வநாதர் கோயில்: காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

by Staff / 23-09-2022 03:14:16pm
முத்தம்மாள்புரம் காசிவிஸ்வநாதர் கோயில்: காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள முத்தம்மாள்புரம் கிராமத்தில் காசி விஸ்வநாதசாமி கோயில் காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டிஸ் ஏல மையத்தில் இருப்பதை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கண்டறிந்தனா். அதனை மீட்கும் நடவடிக்கை தீவீரப்படுத்தப்பட்டுள்ளது.முத்தம்மாள்புரம் கிராமத்தில் காசி விஸ்வநாதசாமி கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காலசம்ஹாரமூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தியின் 82. 3 செ. மீ. உயரம் கொண்ட சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.  

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அதே வடிவில் போலி சிலையை மர்ம நபர்கள் வைத்து விட்டு சென்றனர். அது போலி சிலை போல் உள்ளது என சந்தேகம் அடைந்த கோயில் செயல் அலுவலர் சுரேஷ் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசில் 2020 ஆம் ஆண்டு புகார் செய்தாா்.அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். வழக்கு விசாரணையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் தீவிரப்படுத்தினா்.  உலகில் உள்ள அருங்காட்சியங்கள், கலைக்கூடங்கள், ஏல மையங்கள் மற்றும் தனியார் சிற்றேடுகளில் சிலைகளை தேடுவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தது.  

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டிஸ் ஏல மையத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் காலசம்ஹாரமூர்த்தி சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து காலசம்ஹாரமூர்த்தி சிலையை மீட்டு கொண்டு வரும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo