பள்ளி மாணவ மாணவிகளை தேனீ கொட்டியதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோப்பில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குறுங்காடுகள் திட்ட துவக்க விழா நடைபெற்றது இந்த விழாவில் மரம் நடும் விழிப்புணர்வை ஏற்படுத்த அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த சுமார் 60 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழா முடிந்த நிலையில் சிற்றுண்டிக்காக மரத்தடியில் உணவு அருந்தி கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத நிலையில் மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீ பூச்சிகள் பறந்து வந்து அங்கு கூடியிருந்த அனைவரையும் தாக்கியது.
அதில் கலந்து கொண்ட 11 மாணவ மாணவிகள், 2 ஆசிரியர்கள், செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் 3 பேரையும், போட்டோகிராபர் ஒருவரையும் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 5 நபர்கள் என மொத்தம் 22 நபர்களை தேனீ கொட்டியது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags :