அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து: வானதி சீனிவாசன்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் அவரிடம், '2026-இல் கூட்டணி ஆட்சி என்று சொல்லமாட்டேன். அது பாஜக ஆட்சி என்றே சொல்வேன்' என அண்ணாமலை கூறியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “அண்ணாமலை சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. தேசிய தலைமை எடுக்கும் முடிவே இங்கு நடக்கும். கட்சியின் நிலைப்பாடு எதுவோ, அதன்படியே செயல்படுவோம்" என கூறினார்.
Tags :