உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

by Staff / 15-07-2023 05:35:25pm
உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

'மோடி' குடும்பப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுத்து குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீது குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ.வான பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

 

Tags :

Share via

More stories