50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்கியது

. தமிழக அரசானது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளில் 100 சதவீத பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த 100 சதவீத பேருந்துகளில் 50 சதவீத பயணிகளே பயணம் செய்ய வேண்டும் எனவும், குளிர்சாதன பேருந்துகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.
இதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பயணிகளின் வரத்தானது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. செங்கல்பட்டை பொறுத்தவரை தற்போது அதிகப்படியாக காய்கறி மார்க்கெட்கள் திறக்கப்பட்டுள்ளன. ஜவுளிக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகளின் வரத்தானது மிகவும் குறைவாக காணப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்பட்டு வருகிறது.
Tags :