பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது

by Staff / 05-06-2024 12:48:44pm
பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து  பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது

காஞ்சிபுரம் பஜார் பகுதியில் இயங்கி வந்த பெயிண்ட் விற்பனை செய்யும் கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீ மளமளவென எரிந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo