சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காலமானார்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் (56) காலமானார். தஞ்சாவூரை சேர்ந்த அவர், சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு உயிரிழந்தார். சத்யநாராயண பிரசாத் அவர் குடும்பத்தில் 2-வது தலைமுறை நீதிபதி ஆவார். அவர் மறைவுக்கு சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
Tags :