பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டத்தில், ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி, 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ் (5) என்ற சிறுவன் ரம்புட்டான் பழம் சாப்பிட்டுள்ளார். அப்போது அதன் விதை தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மூச்சுவிட முடியாமல் சிறுவன் தவித்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Tags :