25 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை.. 18 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு.

by Editor / 24-01-2025 10:05:24am
25 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை.. 18 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு.

கேரளாவின் மலப்புரத்தில் காட்டு யானை ஒன்று, வெத்திலப்பாறை பகுதியைச் சேர்ந்த சன்னி என்பவரது 25 அடி ஆழ கிணற்றில் நேற்று (ஜன., 23) அதிகாலையில் தவறி விழுந்தது. யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறை, தீயணைப்புத்துறையினர் 18 மணி நேரத்திற்கு மேல் போராடினர். ஜேசிபி உதவியுடன் கிணற்றை வெட்டி யானையை மீட்டனர். கிணற்றின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதால், புதிய கிணறு அமைக்க, இடத்தின் உரிமையாளர், சன்னிக்கு, ரூ.1.50.லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறை உறுதியளித்துள்ளது.

 

Tags : 25 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை.. 18 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு.

Share via