நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக்காலம் ஆகும்.

by Editor / 22-11-2022 11:16:58pm
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக்காலம் ஆகும்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக்காலம் ஆகும். இந்நிலையில்கடந்த நவம்பர் 10 தேதி முதல் நேற்று வரை நீலகிரி மாவட்டத்தில் நீர் பனிப்பொழிவு காணபட்டது.இந்நிலையில் இன்று அதிகாலை உதகை, தலைக்குந்தா, குதிரை பந்தைய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைப்பனி பொழிவு காணப்பட்டது. உறைப்பனி பொழிவு காரணமாக சாலையோரங்களில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள், நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் தெளிவாக தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.இதனிடையே இரவு முதல் பனிப்பொழிவு காணப்படும் நிலையில் காலை 9 வரை கடும் குளிர் நிலவியது. பனிப்பொழிவு காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரியாக பதிவாகியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via