முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிப்பு
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் அமைச்சரும்,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.சுரேஷ்ராஜனை, அப்பொறுப்பில் இருந்து திமுக தலைமை விடுவித்துள்ளதாகவும்,அவருக்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த ஆர்.மகேஷ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags : Former Minister Suresh Rajan released from the post of District Superintendent