தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் - 2 பேர் கைது

by Staff / 24-08-2024 02:48:55pm
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் - 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையம்  வழியாக  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  கடத்தி கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்  ஸ்டீபன் ராஜ் தலைமையில்  தலைமைக் காவலர்  முத்து மாரி, முதல்நிலைக் காவலர்  ரமேஷ், காவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர் . அப்பகுதியில் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த  சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தில் தடைசெய்யப்பட்ட   புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்  புகையிலை பொருட்களை கடத்தி வந்த சோழபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த யாகப்பராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 ஆயிர ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via