தங்கம் தென்னரசுக்கு நன்றி : கனிமொழி

by Staff / 19-02-2024 04:37:30pm
தங்கம் தென்னரசுக்கு நன்றி : கனிமொழி

தூத்துக்குடி எம்.பி., கனிமொழி நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து, எக்ஸ் பதிவில் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவதையொட்டி, அப்பகுதியில் வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2000 ஏக்கர் பரப்பளவில், புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via