அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் கிராம நிர்வாக அதிகாரி சுரேந்திரன் என்பவர் தனியார் மஹால் அருகே மயக்கமான நிலையில் 45 வயதுக்கும் மேல் உள்ள ஆண் படுத்திருப்பதாக போலீசாருக்கு கடந்த 17 ம்தேதி தகவல் தெரிவித்தார்.உடனடியாக போலீசார் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். தற்போது உயிரிழந்தவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் அறிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















