கனிமொழி எம்.பி.,யின் கணவர் சென்னை அப்பல்லோவில் அனுமதி

by Staff / 22-03-2023 04:02:32pm
கனிமொழி எம்.பி.,யின் கணவர் சென்னை அப்பல்லோவில் அனுமதி

தூத்துக்குடி எம்.பி., கனிமொழியின் கணவர் அரவிந்தன் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் வசித்து வரும் அரவிந்தனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதையடுத்து, அங்குள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கனிமொழி அங்கு சென்று, கணவர் உடன் இருந்தார். இந்நிலையில் அரவிந்தன் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

Tags :

Share via